DOWNLOAD PPT 

இயேசப்பா உம்மை தேடி வந்தேன்

எல்லாமே விட்டு விட்டு வந்தேன்

எனக்கெல்லாமே நீர் தானே

என் வாழ்வெல்லாம் நீர் தானே

என் சொந்தம் பந்தம் யாவும் நீர் தானே


சொந்தம் என்று சொன்ன உடனே

உம்மை தானே நினைக்கின்றேன்

உம்மை அறிந்த நாளில் இருந்து

உம்மையே அண்டி கிடக்கின்றேன்


அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே

என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே

இன்று நீர் இன்றி நான் இல்லையே

உம்மை அன்றி யாரை நம்பி நானும் தேடி போவேன்


என் மனதின் வேதனை எல்லாம்

புரிந்து கொள்வார் யாரும் இல்லை

இதயம் நொருங்கி கலங்கும் நேரம்

அன்பு காட்டவும் யாரும் இல்லை


அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால்

என்றோ மண்ணாகி போயிருப்பேன்

இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே

என்னை அறிந்து என் மனம் புரிந்த

ஒரு ஜீவன் நீரே ஐயா







Send ur feedbacks at mediatrustcross@gmail.com

Search: yesappa ummai thedi vanthene, yesappa ummai thedi ppt, yesappa ummai thedi lyrics, yesappa ummai thedi messiah lyrics, yesappa ummai thedi vanthen lyrics yesappa ummai thedi vanthen ppt, tamil christian song lyrics, tamil christian songs, tamil christian songs ppt, christanthem, christhymn, tamil songs, messiah songs, messiah song lyrics