நட்ட நடு ராத்தியில!..
தன்னந்தனியா நிக்கையில!..
உதவி செய்வேனு உறுதி தந்தவங்க உதறிவிட்டு போகையில!..
என்ன செய்ய என்று தவிக்கையில!..
சூழ்நிலையை ஏற்க மனம் மறுக்கையில!..
பாதை இருந்தும்
பாதை அறியாம பதறயில!...
வழி இருந்தும்
வழியை அறியாத விழியாக முழிக்கையில!..
பலருக்கு இனிமையான இரவும் இருளா மாறயில!...
பெருமூச்சி விட்டு "போதுமடா சாமி"னு சோர்ந்து போய் நடக்கையில!...
*"நானே வழி என்று*
*சொன்னவர்!*
*"வழி இதுவே இதில்*
*நடவுங்கள் என்றவர்!*
*"வாழ்வின்*
*வழியுமானவர்!*
சோர்ந்துப்போய்
குன்றி இன்றவளையும் வார்த்தையை அனுப்பி
தேற்றிடத்தான் தேடி வந்தார்!...
அவர் வார்த்தையினால் என் மனதையும் வென்றார்!...
கோணலானவைகளச்
செவ்வையாக்கவும்!..
கரடுமுரடானத
சமமாக்கவும்!...
உயர்ந்த மேடுகளில்
ஆறுகளையும்!...
பள்ளத்தாக்குகளின்
நடுவே ஊற்றுகளையும்!..
வனாந்தரத்தைத் தண்ணீர்த்தடாகமாகவும்!..
வறண்ட பூமியை நீர்கேணிகளுமாகவும்!...
வனாந்திரத்தில வழியையும்!..
அவாந்திரவெளியில
ஆறுகளையும் உண்டாக்கக்கூடியவரு!.
தலையில் உள்ள மயிரும்
தரையில உதிர்வத அறிந்தவரு!...
மீதம் எத்தனை
உள்ளதுனு எண்ணி வைத்தவரு!...
உன்னை தொடுவோன்
என்
கண்ணின்மணியை
தொடுகிறான் என்று
சொன்னவரு!..
என் உருவத்தையும்
உள்ளங்கையில
பொறிந்தவரு!...
என் மதிலும் எப்போதும் அவருக்கு முன்னாடி இருக்குதாம்!..
என் நினைவுகளையும்
தூரத்திலிருந்து
அறிந்தாராம்!...
"என்னத்த சொல்ல!"...
*"அவர் அன்பிற்கு*
*எல்லையே இல்ல!...*
*"அவர் இரக்கத்துக்கு*
*முடிவும் இல்ல"*!...
எத்தனான வாழ்வில்
இத்தனை பெரிய
தெய்வத்தை சொந்தமாக
பெற்று!..
கடந்த காலத்தையும்!..
கடக்கின்ற காலத்தையும்!..
கடக்கப்போகும் காலத்தையும் கணித்தவர் கரம் என்னோடிருக்க!..
அவரை மீறி என்ன நடந்திட்டது?..
என்ன நடந்திடக்கூடும்?..என்று
என்னுள்ளத்திலிருந்து
மெல்லிய சத்தம் எழுந்திட!...
உடனே உள்ளம் மகிழ்ச்சியில் பொங்க!..
கண்களில் கண்ணீர் மல்க!..
மௌனமாய் நின்ற உதட்டினில் சிரிப்பையும் துதிப்பாட்டையும் தந்தவரை என்ன சொல்லுவேன்!..
அவரை எப்படி நிதானிப்பேன்?..
உம்மைப்போல் நேசித்திட எவரால் முடியும்?...
உம்மைவிட அதிகமாய் நேசித்திட யாரால் தான் முடியும்?..என்று
சோர்ந்த இதயமும் அவரிடம்
சொல்லிடத்தான் துடித்தது!..
அப்புரம் என்ன!..
இருளான இரவும்...
அவருடன் இனிமையாகத்தான்
கடந்தது!....
அவருடான என் பயணமும் தொடர்ந்தது!...
தனிமையான தருணமும் என் தகப்பனுடன் சில்லென வீசும்
குளிர்காற்றைப்போல சுகமாகத்தான் இருந்தது!...
கற்பனையில் கலந்தவை அல்ல!...
நிஜத்தினில் நிகழ்ந்தவை!..
♥️அவரால் நான்...