Ummodu Naan Vaalum Lyrics PPT - உம்மோடு நான் வாழும்

உம்மோடு நான் வாழும் ஒவ்வொரு நொடியும்
பெலவானாய் உணர செய்கிறீர்
உம் தோளில் நான் சாயும் ஒவ்வொரு கனமும்
தலை நிமிர்ந்து வாழ செய்கிறீர் - 2

உம் கிருபைகள் அளவில்லாதது 
நீர் தருவது இணையில்லாதது - 2
அதை தினம் எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி மனம் சிலிர்க்குதே

தகப்பனாய் தாயாய் உறவாய் என் உயிராய் - 2
நேற்றும் இன்றும் என் நாளையும் நீர்தான்
நான் இங்கு யாரோ என் எல்லாமே நீர்தான் - 2
விலகாத மேகம் நான் விரும்பிடும் சிநேகம்

காற்றாய் மழையாய் நினைவாய் என் நிழலாய் - 2
என் நாவின் சொற்கள் நான் சொல்லாமல் அறிவீர்
நான் பிறக்கும் முன்னே என் பெயர் கூட அறிவீர் - 2
நிறைவான தேடல் என் நிரந்தரப் பாடல்

Ummodu Naan Vaazhum Ovvoru Nodiyum 
Belavaanaai Unara Seigireer
Um Tholil Naan Saayum Ovvoru Kanamum  
Thalai Nimirthu Vaazha Seigireer  

Um Kirubaigal Alavillaadhadhu  
Neer Tharuvathu Inaiyillaadhadhu  
Athai Dhinam Enni Enni Enni  
Enni Manam Silirkkudhe  

Thagappanaai Thaayaai Uravaai En Uyiraai  
Nettrum Indrum En Naalaiyum Neerthaan  
Naan Ingu Yaaro En Ellaame Neerthaan  
Vilagaadha Megam Naan Virumbidum Sinegam  

Kaatraai Mazhaiyaai Ninaivaai En Nizhalaai  
En Naavin Sorkal Naan Sollamal Ariveer  
Naan Pirakkum Munne En Peyar Kooda Ariveer  
Niraivaana Thedal En Niranthara Paadal

DOWNLOAD PPT