அபிஷேகம் இருந்தால் போதுமே – அது
அனைத்தையும் உன் வாழ்வில் செய்யுமே
அபிஷேகம் இருந்தால் போதுமே – அது
நுகங்களை எல்லாம் முறிக்குமே – இயேசுவின்
1. படிப்பும், பட்டமும் தேவையில்லை
பாரினில் உன்னை உயர்த்திடவே
பாசமிகுந்த நல் இயேசு ராஜனின்
அபிஷேகம் இருந்தால் போதுமே
2. பெரிய மனிதர்களும் தேவையில்லை – நீ
பெரிய காரியம் செய்திடவே
பெரிய தேவனின் மகிமை நிறைந்த நல்
அபிஷேகம் இருந்தால் போதுமே
3. எத்தனை கட்டுகள் வாழ்க்கையிலே – நீ
எதிலும் கலங்கத் தேவையில்லை
அத்தனையும் இன்று உடைந்திடுமே
தேவ அபிஷேகத்தால் அவை முறிந்திடுமே