யாருமில்ல என்று சொல்லி
நான் அழுத நேரத்திலே
என்னையும் தேடி வந்து
தேற்றின தெய்வமே
தேற்றின இயேசுவே - 2
அன்பு காட்ட அம்மா இல்ல
பாசம் வைக்க அப்பா இல்ல
என்னையும் அரவணைக்க
சொந்த பந்தம் யாருமில்லா - 2
அனாதையாய் நான் நின்றேனைய்யா
எனை ஆதரிக்க நீர் வந்தீரைய்யா - 2
வாழ்க்கை என்னும் பாதையில் நான் நடந்த வேளையில்
எத்தனையோ துரோகங்கள் ஏமாற்றம் தோல்விகள்
மனமுடைந்து நான் அழுதேனைய்யா
நீர் மனமிரங்கி அழதே என்றீறையா - 2
கண்ணீருக்கு பஞ்சமில்லை கவலையே கொஞ்சமில்ல
என்னையும் தேற்றி எனக்கென்று யாருமில்ல
தன்னந் தனியாய் நான் நின்றேனையா
என் அருகில் வந்து கட்டி  அனைத்தீரைய்யா - 2