Pinmariyin Abisegam Lyrics PPT
பின்மாரியின் அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அதிகமாய் பொழிந்திடுமே
ஆவியில் நிரப்பிடுமே
அக்கினியாய் இறங்கிடுமே
அக்னி நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
எலும்புப் பள்ளத்தாக்கினில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்க்கதரிசனம் உரைத்திடவே
கர்மேல் ஜெப வேளையில்
கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாபும் நடுங்கிடவே
அக்னி மழையாகப் பொழிந்திடுமே
சீனாய் மலையின் மேலே
அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னை அக்கினியாய் மாற்றிடுமே..