தேவ ஆவியே தேற்றரவாளனே தாகம் தீர்க்கும் ஜீவ நதியே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே என்னை பாதுகாக்கும் தூய ஆவியே வாரும் வாரும் வாரும் உம் மகிமையால் என்னை நிரப்பும்

பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்துச் செல்லும்
பரிசுத்தரே என்னில் வாரும் 1.கட்டுக்கள் அவிழ்த்திடும் நுகங்களை முறித்திடும் காயம் கட்டும் தேவ ஆவியே 2.கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமும் சகல சத்தியத்திலே நடத்தும் சத்திய ஆவியே 3.பாவத்தைக் குறித்தும் நீதியை குறித்தும் கண்டித்து உணர்த்தும் அன்பின் ஆவியே