யாருண்டு எனக்கு

கடைசி நாட்களிலே அழியும் உலகினிலே… நீர் தான் துணை எனக்கு நீர் தான் துணை எனக்கு கடைசி நாட்களிலே அழியும் உலகினிலே பாவி என்று தெரிந்த போதும் பாசம் என்மேல் வைத்தீரே.... பாவ சேற்றில் கிடந்த என்னை தூக்கி அன்று எடுத்தீரே தோளில் தூக்கினீரே உம்மை பாடிடுவேன் ஜீவன் உள்ளவரை உம்மை போற்றிடுவேன் நீர் தான் துணை எனக்கு - தேவா நீர் தான் துணை எனக்கு கடைசி நாட்களிலே அழியும் உலகினிலே முடிந்ததென்று சொன்னபோதும் துவக்கம் எண்ணில் தந்தீரே… கிருபையாக என்னை உயர்த்தி தோளில் தூக்கி சுமந்தீரே தாயின் கருவினிலே என்னை தாங்கினீரே வாழ்நாள் முழுவதுமே என்னை தாங்கிடுமே யாருண்டு எனக்கு - தேவா யாருண்டு எனக்கு கடைசி நாட்களிலே அழியும் உலகினிலே… நீர் தான் துணை எனக்கு - தேவா நீர் தான் துணை எனக்கு கடைசி நாட்களிலே அழியும் உலகினிலே