என்னைக் காண்பவரே தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும் அப்பா
நீர் அறிந்திருக்கின்றீர்
நன்றி ராஜா இயேசு ராஜா
முன்னும் பின்னும் நெருக்கி
நெருக்கிச் சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும்
என்னைப் பற்றி பிடித்திருக்கின்றீர்
கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
பக்குவமாய் உருவாக்கினீர்