உம் ஜனங்கள் ஒருபோதும்  Lyrics

உம் ஜனங்கள் ஒருபோதும் 

வெட்கப்பட்டு போவதில்லை 

தேவனாகிய கர்த்தாவே 

உம்மை போல் வேறொருவரில்லையே

எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே

வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்)


இயேசைய்யா இரட்சகரே

இயேசைய்யா மீட்பரே


தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு

பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு

களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்

அதிசயமாய் நம்மை நடத்திடுவார் 

திருப்தியாய் நம்மை நடத்திடுவார்


இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும்

மீட்டு தருபவரே இயேசைய்யா

முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும் 

என் மேல் பொழியச் செய்பவரே