இராஜா இயேசு இராஜா
பாவி என்னை தேடி வந்தீரே
பாவ பலியாய் உம்மை தந்தீரே
நித்திய மீட்பை தந்திடவே
பாவமறியா பரிசுத்தரே
பாவத்தை போக்க பாவமானீர்
எனக்காக எனக்காக
இனி நான் வாழ்வது உமக்காக
விலை ஏதும் இல்லா கிருபை ஈந்து
விலை என்ன தருவேன் இதற்காக
ஏதும் இல்லை ஏதும் இல்லை
என்னையே தந்தேன் உமக்காக
என் கரம் கண்டு என்னை மீட்க
உம் கரம் தந்தீர் எதற்காக-2
என்ன செய்தேன் நான் என்ன செய்வேன்
என்னில் உம் அன்பை காண செய்வேன்
0 Comments
Leave your comments here📬