Main Vilambaram

Paralogam Enthan Thesamam Lyrics

பரலோகம் எந்தன் தேசமாம்
பூலோகம் மாயலோகமாம்
அழிந்து போகும் இப்பூமியில்
அழியாத உம் வார்த்தை விதைப்பேன்

இருளான என் வாழ்க்கையில்
ஒளியாக வந்த தெய்வம் நீர்
ஒளியான கிறிஸ்து
உம்மை நான் உலகமெங்கும்
பாடித் துதிப்பேன்

அற்பமான என் வாழ்க்கையில்
அன்பின் தெய்வம் தேடி வந்தீர்
அழிவில்லா உன் வார்த்தையை
அகிலமெங்கும் பாடித்துதிப்பேன்

பாவியான என் வாழ்க்கையில்
பாவம் போக்க வந்த தெய்வம்
பரிதபிக்கும் என் தேசத்தில்
பரமன் உம்மைப் பாடித் துதிப்பேன்




Post a Comment

0 Comments