என் ராஜா இயேசுவை நான் பிரஸ்தாபப்படுத்துவேன்
எல்லா தலைமுறைகளிலும் என் ராஜா பிரஸ்தாபப்படுவாரே
இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தாவாம்
அவர் சரிரம் முழுவதுமே ஒப்பீரின் தங்கமாம்
அவர் வசீகரத்திற்கு ஈடு இணை இல்லையாம்
என் வஜ்ர கல்லே கல்லே என் வாஞ்சை எல்லாம் நீரே
ஏதேனில் என்னை வைத்து அழகு பார்த்தவரே
எத்தனாய் மாறி உம் மை அழ வைத்து விட்டேனே
என் பாவம் போக்கவே என் சாபம் நீக்கவே
காற்றினில் செட்டையடித்து காப்பாற்ற வந்தவரே
எனக்காக பிரம்படிகள் எனக்காக கசையடிகள்
காரி துப்பப்பட்டீர் காட்டி கொடுக்கப்பட்டீர்
கேலிகள் செய்யப்பட்டீர் கோலாலடிக்கப்பட்டீர்
நீ சுமந்த சிலுவை அது நான் செய்த பாவம் அது
லாடம் கட்டப்பட்டீர் அலங்கோலமாக்கப்பட்டீர்
இரத்தங்கள் சொட்ட சொட்ட, மீட்புகள் என்னை ஒட்ட
சிலுவை உம் இரத்தத்தாலே, நானும் பரிசுத்தத்தாலே
நினைவுகள் மாத மாதம் பருகுவேன் திராட்சை பானம்
ஒப்பீரின் தங்கப்பட்டு அப்பமாக பிக்கப்பட்டு
மேசியாவை எதிர்நோக்கி தாசனை பரன் நோக்கி
வாழுவேன் ஜீவன் மட்டும் ஜீவ நூல் என்னை பற்றும்
அல்லேலே அல்லேலூயா
அல்லேலே அல்லேலூயா
ஆராதனை இயேசுவுக்கே