தேவ தேவனே உமக்கு ஸ்தோத்திரம்
எங்கள் ராஜராஜனே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்
உம் பாதம் முத்தம் செய்து ஆராதிக்கிறோம்

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே எங்கள்
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

எங்கும் வியாபித்து இருப்பவரே
எல்லவற்றையும் ஆளுகை செய்பவரே
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு நிகரானவர் எவருமில்லை

ஜெபத்தை கவனித்து கேட்பவரே
ஜெபத்திற்கு நல்ல பதில் தருபவரே
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு நிகரானவர் எவருமில்லை

வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவரே
வாக்கு மாறாத உத்தமரே
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு நிகரானவர் எவருமில்லை