கர்த்தாவே உம்மை நம்பினவர்
வெட்கமடைவதில்லை
உமக்காக காத்திருப்போர்
சோர்ந்துபோவதில்லை

வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே

மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே

நடக்குமா நடக்காதா என
சோர்ந்து போயிருந்தேன்
( ஒரு ) அற்புதம் நடக்காதா என
ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு)

நான் நினைத்திடா வேளையில்
அற்புதம் செய்தீரே
யாரும்  நினைத்திடா வழியிலும்
அற்புதம் செய்தீரே

பழித்திட வந்தோரை
இலச்சை மூடினதே
அழித்திட வந்தோரை (நினைத்தோரை)
நிந்தை மூடினதே - (எனை)

காண்போரே வியந்திட
உயர்த்தி வைத்தீரே
அட! இவன்தானா என்றெண்ணும் 
அளவில் வைத்தீரே

DOWNLOAD PPT

Miguvel Isravel Lyrics ppt | John Jebaraj | John De Britto | Miguel Israel