உம்மைப்பார்க்க ஆசையே
என்னோடு பேசும் தெய்வமே
நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேட்கலை
நீர் இல்லாத என் வாழ்க்கை அர்த்தமே இல்ல
கூடுண்டு பறவைகட்கு
குழி உண்டு நரிகளுக்கு
என் நேசர் இயேசுவுக்கோ
தலை சாய்க்க இடமுமில்ல
ஏங்குகிறேன் ஏக்கத்துல
இடமிருக்கு என் மனசுக்குள்ள
உடைஞ்சி போய் கிடந்தேனே
உதவாம போனேனே
மெய்யான அன்பைத்ததேடி
உலகெல்லாம் (உலகில் நான்) அலைஞ்சேனே
உசுருக்கு மேலாக என்னையும் நினைச்சாரு
நான் வாழ எனக்காக உசுரையும் கொடுத்தாரு
உசுருக்கு மேலாக உன்னையும் நினைச்சாரு
நீ வாழ உனக்காக உசுரையும் கொடுத்தாரு
உலகத்துல நான் இருந்தும்
அது எனக்கு சொந்தமில்லை
நிரந்தரமா அவர் இருக்க
ஒரு குறையும் எனக்கு இல்லை
0 Comments