கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே
இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே
தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்
தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்
தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்
நன்றி ஐயா இயேசய்யா
கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்
கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்
மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்
துக்கங்கள் பாடுகள் பெலவீனங்கள்
பாவங்கள் நோய்கள் சுமந்து தீர்த்த்தீர்