காத்திடுவார் என்னை காத்திடுவார்
காலமெல்லாம் என்னை காத்திடுவார்
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
கடைசி வரை என்னைக் காத்திடுவார்

அல்லேலுயா அல்லேலுயா
என் இயேசுவுக்கு அல்லேலுயா
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே

ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார்
சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார்
வழுவாமல் காத்திடும் வல்லவரே
வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார்

தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
சேதங்கள் நெருங்காது காத்திடுவார்
தீயவன் அம்புகள் எய்திட்டாலும்
அக்கினி மதிலாக காத்திடுவார்

போக்கையும் வரத்தையும் காத்திடுவார்
இயேசுவே அரணாக காத்திடுவார்
கண்களின் மணிப்போல காத்திடுவார்
கன்மலை மேலே உயர்த்திடுவார் காத்திடுவார்

DOWNLOAD PPT

Kaathiduvaar Song Lyrics PPT - Jesus Redeems
Search Description: kaathiduvaar lyrics. kaathiduvaar lyrics ppt. kathiduvar song lyrics ppt. kaathiduvar song. kadhituvar. song lyrics in tamil. jesus redeems.