ஜே! ஜே!
என்று சொல்லுவோம்
இயேசு ராஜாவுக்கே

ஜெயம் ஜெயம் நமக்கு தந்தார் - இயேசு
ஜெயம் ஜெயம் நமக்கு தந்தார்

ஜே ஜே ஜே என்று சொல்லுவோம்
இயேசு ராஜாவைப் பாடுவோம்

1. நாம் வாழ நல்ல காற்று தந்தார்
நாளெல்லாம் அவரை போற்றிடுவோம்
நாம் வாழ நல்ல சுகம் தந்தார்
நாளெல்லாம் அவரை வாழ்த்திடுவோம்

2. நாம் வாழ சொந்த மகனைத் தந்தார்
நாளெல்லாம் அவரை வாழ்த்திடுவோம்
நாம் வாழ இயேசு ஜீவன் தந்தார்
நாளெல்லாம் அவரை போற்றிடுவோம்

3. சாத்தானை சிலுவையில் ஜெயித்துவிட்டார்
நாளெல்லாம் அவரை போற்றிடுவோம்
ராஜாதி இயேசு ராஜாவை
என்றென்றும் பாடி துதித்திடுவோம்