கர்த்தரின் பெட்டகம் நம் தோள் மேலே
கல்வாரி நாயகன் நமக்குள்ளே
சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்
சொல்லிடுவோம் சுவிசேஷம்
யோர்தான் நதியும் விலகியது
பெட்டி சுமந்த கால்பட்டவுடன்
எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன
ஏழு நாள் ஊர்வலம் வந்ததால்
தாகோன் விழுந்து நொருங்கியது
வல்லமை இழந்து உடைந்து போனது
சாத்தானின் கிரியைகள் அழித்திடுவோம்
சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால்
வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே
நேர்வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி
நோக்கிப் பார்க்கும் கண்கள் எல்லாம்
நிரம்பிடுமே சந்தோஷத்தால்
ஓபேத் ஏதோமின் உறைவிடத்தில்
மூன்று மாதங்கள் இருந்ததினால்
கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார்
உண்டான அனைத்தையும் பெருகச் செய்தார்