உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
உயர்த்திடுவேன் முழு மனதுடனே
பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
இயேசு உயிர்த்தெழுந்தாரே
 
எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
நித்திய காலமாய் ஜீவிப்பாரே
உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் 

மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்
மரணத்தின் கட்டுகளை அறுத்தீர்
கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி
களிப்பாய் மாற்றுவீரே
சாத்தானின் சகல வலிமையை வென்று
சிலுவையில் ஜெயம் தந்தீரே

எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே

அழுகையின் நாட்கள் முடிந்ததே
அழியாத சுதந்திரம் கிடைத்ததே
பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட
இயேசு மரித்தீரே
பூரண பலன் நான் பரலோகில் பெற்றிட
இயேசுவே உயிர்த்தீரே

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே
உயர்த்திடுவேன் முழு மனதுடனே
பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து
இயேசு உயிர்த்தெழுந்தாரே
 
எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
நித்திய காலமாய் ஜீவிப்பாரே
உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்
நீயும் விசுவாசித்தால் மரித்தாலும் பிழைத்திடுவாய்

DOWNLOAD PPT

மீட்பர் உயிரோடிருக்கிறார் | Meetpar Uyirodirukiraar | Arise 2024

Search Keywords: meetpar uyirodu irukiraar. meetpar uyirodirukiraar. jesus calls. paul dhinakaran. stella ramola. arise 2024. tamil christian song. song lyrics. song ppt. ppt download. free download. lyrics ppt.