ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவே காயங்கள் எதற்கு
கைகள் கால்களில் ஆணிகள் பாய
கோர காட்சியும் எதற்கு

சிந்தையில் பாவம் செய்ததால் தான்
சிரசினில் முள்முடி அறைந்தனரா
இரத்தம் ஆறாக ஓடிடுதே
இதயம் புழுவாக துடிக்கிறதே

தியாகமாய் ஜீவனை ஈந்ததாலே
தருகிறேன் எந்தன் இதயமதை
தாகமாய் சிலுவையில் தொங்கினீரே
தாகத்தை தீர்த்திட வருகின்றேன்