வாக்குத்தத்தம் என் மேலே
ஒரு நாளும் விழமாட்டேன் கீழே
கூட நிற்கும் கூட்டமெல்லாம் நாளாக நாளாக மாறும்
அப்பா தந்த வாக்குத்தத்தம்
நாளானாலும் கையில் சேரும்
ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு
என் பக்கத்துல அல்லேலூயா
அவர் சரித்திரத்தில் முடியாதுனு
எதுவுமில்லை அல்லேலூயா
யோசேப்புக்கு ஒரு சொப்பனம்
Familya எதிர்த்தாங்க மொத்தமும்
எந்த சொப்பனம் கீழ தள்ளுச்சோ
அதவச்சே தூக்குனாரு மேல
கீழ எறிஞ்சா கைல புடிச்சு தூக்குவது
அப்பாவோட வேல
எரியுற சூளை என்ன ஆச்சு
எரிய வந்த கூட்டம் எரிஞ்சு போச்சு
வேகும் தீயிலே என்ன எரிஞ்சும்
முடிகூட கருகாமப்போச்சு
தூக்கியெறிய வந்தவனெல்லாம்
தூக்குறது அப்பாவோட ஸ்கெட்சு
ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு
என் பக்கத்துல அல்லேலூயா
அவர் சத்தம் கேட்டா பாதாளமே
குலை நடுங்கும் அல்லேலூயா
Search Descriptiuon: yutha raja singam, john jebaraj, vakuthatham en mela, lyrics, ppt, tamil christian songs, tamil christian ppt, song lyrics in tamil