ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு
இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு
இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு
குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு
குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு
ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு
எந்தக் காலத்திலும் மாறாத அன்பு
மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு
மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு
என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு
Search Description: aalamana aliyilum alamana anbu, aalamana aliyilum lyrics, aalamana aliyulum ppt, gersson edinbaro, neere 6, neerae 6 song lyrics, ppt, chords. Yesuvin Anbu