இந்தக் காலத்தில் நீ மெளனம் கொள்ளாதே
இந்தக் காலத்தில் நீ மறைந்து கொள்ளாதே
உனது காலமிது ஒளிவீசும் நேரமிது
அரண்மனை வாழ்வு போதுமென்று அமைதி கொள்ளாதே
அழிந்திடுவோரின் கதறலை உந்தன் செவிகள் கேட்டிடட்டும்
ராஜமேன்மை கிடைக்கப் பெற்றாய்
இயேசு ராஜாவின் ஊழியம் செய்திடவே
தேவைகள் நிறைந்தோர் திரளாய் உன்னை சூழ்ந்து நிற்கின்றனர்
சிலுவையின் அன்பை அறிந்திடாமல் மடிந்து போகின்றனர்
யாரை அனுப்புவேன் என்றவரின்
கதறலை உன் உள்ளம் கேட்டிடாதோ
தடைகளைக் கண்டு தயங்கிநின்று தளர்ந்து போகாதே
வஞ்சகன் செய்த சதிகளைக் கண்டு பயந்து போகாதே
உலகத்தை ஜெயித்தவர் உன்னுடனே
யாவையும் செய்வார் உனக்காகவே
DOWNLOAD PPT

0 Comments