என் தலையை உயர்த்திடும் தேவன்
என்னோடு இருக்க பயம் இல்லையே
என் நிலைமை அறிந்திடும் தேவன்
என்னோடு இருக்க பயம் இல்லையே
ஏல் பிராசிம் ஏல் பிராசிம்
தடைகள் உடைப்பவரே
துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்
இரட்டிப்பு தருபவரே
முந்தின காரியம் இனி இல்லையே
பழையதெல்லாம் ஒளிந்திடுதே
கர்த்தரோ இறங்கி செயல்படுவீர்
புதிய நன்மைகள் எனக்களிப்பீர்
சிறுமைப்பட்ட இடங்களில் எல்லாம்
சிரசை உயர்த்தி மகிழ செய்வீர்
நித்திய மாட்சிமை எனக்கு தந்து
தலைமுறை தலைமுறை துதிக்க வைப்பீர்
நேர்த்தியான இடங்களில் எல்லாம்
சிறந்த பங்கை எனக்களிப்பீர்
வாக்கு பண்ணின ஒவ்வொன்றுமே
குறித்த நேரத்தில் நிறைவேற்றுவீர்
0 Comments