Enthan Ullam Pudhu Kavi Lyrics, Chords, PPT | Sis. Saral Navaroji


Enthan Ullam Pudhu Kavi Lyrics, Chords, PPT | Sis. Saral Navaroji



எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

அல்லேலூயா துதி அல்லேலூயா
எந்தன் அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன்

சென்ற காலம் முழுவதும் காத்தாரே
ஓர் சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும் 
சுக பெலன் அளித்தாரே

சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே

பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும்
தாம் தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே

களிப்போடு விரைந்தெம்மை சேர்த்திட
என் கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம்

DOWNLOAD PPT


Keywords: enthan ullam pudhu kavi lyrics, enthan ullam pudhu kavi lyrics ppt, enthan ullam pudhu kavi lyrics in tamil, enthan ullam pudhu kavi ppt, enthan ullam pudhu kavi song lyrics. enthan ullam puthu kaviyale lyrics. enthan ullam puthu kaviyale ppt. enthan ullam puthu kaviyale song lyrics. enthan ullam puthu kaviyale song ppt. saral navaroji. enthan ullam pudhu kaviyale lyrics. எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க