Boomikoru Punitham Lyrics PPT | Alwyn Thomas | Christmas Songs
பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
பரலோக தந்தையின் செல்லம் வந்தது
மண்ணான என்னையும் தேடி வந்தது
அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது
எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா
கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்
எளியோனை நேசித்த மாமன்னவர்
ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ
உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ
விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே
அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே
சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ
இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்
Search Description: boomikoru punitham lyrics. boomikoru punitham lyrics ppt. bomikoru punidham lyrics. alwin thomas. alwyn thomas. chords. lyrics in tamil. ppt. tamil christian songs. பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது