Dhayavu - Thalaimuraigal Thandi Song Lyrics PPT | John Jebaraj
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே
(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த தயவு பெரியதே
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே
சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர கொண்டு செல்லுதே
Keywords: dhayavu song lyrics. dhayavu song ppt. dhayavu song lyrics ppt. thayavu song lyrics. thalaimuraigal thandi. thalaimuragal thaandi nirkum dhayavu. john jebaraj. lyrics. chords. ppt. lyrics in tamil. lyrics ppt.