Pithave Umakku Aarathanai Lyrics PPT
பிதாவே உமக்கு ஆராதனை
இயேசுவே உமக்கு ஆராதனை
பரிசுத்த ஆவியானவரே
உமக்கென்றும் ஆராதனை
உம்மையல்லாமல் யாரை சேவிப்பேன்
உம்மைதவிர யாரை நேசிப்பேன்
உம்மை நோக்கி பார்த்ததினால்
பிரகாசமடைந்தேனே
எந்தன் முகமோ ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போகவில்லையே
பாவத்தின் அடிமை விலங்கொடித்து
விடுதலை தந்தீரே
கசப்பாக இருந்த எந்தன் வாழ்வை
பாலும் தேனுமாக்கினீரே
துதிகளின் நடுவில் வாழ்பவரே
துதிக்கு பாத்திரரே
துணையாக எனக்கு நிற்பவரே
உமக்குகென்றும் ஆராதனை
எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
சகலத்தையும் செய்ய வல்லவரே
உமக்குகென்றும் ஆராதனை!
தாயும் என்னை மறந்தாலும்
மறவாத என் இயேசுவே
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
உமக்கென்றும் ஆராதனை !
Keywords: pithave umakku aarathanai. pidhava umakku aarathanai. lyrics in tamil. song ppt. lyrics. tamil songs. ppt