எந்தன் தகப்பனும் நீர்தானையா
எந்தன் தாயும் நீர்தானையா
எந்தன் அடைக்கலமே
எந்தன் மறைவிடமே
என்றும் என் வாழ்வின் ஆதாரமே
எந்தன் வாழ்வை மாற்ற வந்த பரிசுத்தரே
எனக்காக சிலுவையை சுமந்தவரே
எந்தன் தகப்பனும் நீர்தானையா
எந்தன் தாயும் நீர்தானையா
துரத்துண்ட பறவை போல் அலைந்தேன் ஐயா
என்னைக் காக்கும் தூதராக வந்தவரே
எந்தன் வாழ்க்கையும் நீர்தானையா
எந்தன் வாஞ்சையும் நீர்தானையா
கண்ணிமைக்கும் நேரத்திலே விழுந்தேன் ஐயா
காக்கும் கரம் கொண்டு என்னை அனைத்தவரே
உந்தன் உள்ளங்கையில் வரைந்திரையா
எந்தன் உயிரே நீர்தானையா
0 Comments
Leave your comments here📬