சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற
சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை
நீர் அரியணையில் வீற்றிருப்பதால்
நான் அசைக்கப்படுவதில்லையே
நீர் அரசாளும் தெய்வமானதால்
எம் சூழ்நிலைகள் மாறுகின்றதே
உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை
ஒரு துரோகியாய் விலகியே
தூரமாய் நின்றேன்
பலிபீடமாம் (உம்) சிலுவையில்
உம் (பெரும்) அன்பினை கண்டேன்
உம் தூய இரத்தத்தினால் கழுவினீர்
என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர்
உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன்
உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்
திரைச்சீலைகள் கிழிந்ததால்
உம் மகிமையை கண்டேன்
கிருபாசனம் மேலதாய்
ஒரு எழுப்புதல் கண்டேன்
உம் மகிமை கண்டதாலே எழும்புவேன்
உமக்காக வாழவே நான் விரும்புவேன்
இனி இயேசுவுக்காகவே வாழுவேன்
என் ஜீவ காலமெல்லாம் பாடுவேன்