அன்பான இயேசப்பா உங்க பிள்ளை வந்திருக்கேன்
செய்த நன்மைகளை சொல்லி பாட வந்திருக்கேன்

நன்றி ஐயா நன்றி ஐயா
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்வேன் ஐயா

தாயும் தகப்பனும் மறந்து போனாங்க
சொந்தமும் பந்தமும் வேண்டாமுன்னு சொன்னாங்க
தாயாக வந்து என்னை அணைத்துக் கொண்டீரே
தந்தையாக வந்து என்னை சுமந்து கொண்டீரே -2 

நன்றி ஐயா...

வாலிப நாட்களில் வழி தப்பி நான் திரிந்தேன்
யாருமே இல்லை என்று அன்புக்காக ஏங்கி நின்றேன் -2
நண்பனாய் வந்து என்னை  சேர்த்துக் கொண்டீரே
சத்தியப் பாதையிலே நித்தமும் நடத்தினீரே -2

குழியில் கிடந்த எண்ணெய் தூக்கி எடுத்தீரே
பாவியாய் இருந்து என்னை பிள்ளையாய் மாற்றினீரே
அற்பமாக இருந்து என்னை தெரிந்து கொன்டீகறேன்
ஊழியம் தந்து என்னை உயர்த்தி வைத்திரே

Search Description: anbana yesappa song lyrics, sujith livingston, unga pillai vanthirukiren