உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன் இயேசையா
உம்மை போல் மாறிடுவேன்
உலக வாழ்வு மாயைதானய்யா
உம்மோடு வாழ்வு உண்மைதானய்யா
பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்
பரிசுத்தமின்றிநான் அலைந்தேன்
என்னையும் தேடி வந்தீரய்யா
உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே
மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்
ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும்
அதிசயம் அனுதினம் என்
வாழ்வைத் தொடருமே - அன்பான
தேவனே உமக்கேஸ்தோத்திரம்
மகிமையின் சாயல் அடைந்திடவே
மறுரூபமாவேன் இமைப்பொழுதில்
முகமுகமாக உம்மை நான் காண்பேன்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே
கண்ணீர்யாவும் மாறியே போகும்
கவலைகள் யாவும் மறைந்தே போகும்
துன்பங்கள் துயரங்கள் இல்லாமல் போகும்
தூயவர் உம்மை துதித்திடுவேன்
பூலோக வாழ்வு நிரந்தரமில்லையே
பரலோக வாழ்வு நிரந்தரம் தானே
உலக வாழ்வு மாயைதானய்யா
உம்மோடு வாழ்வு உண்மைதானய்யா