உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே
அழனுதான் எனக்கு தோணுது
என்னமோ தெரியல ஒன்னுமே புரியல
உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல
காரியம் வாய்க்குமோ சூழ்நிலை மாறுமோ
உம்மையே நம்பியிருக்கிறோம்
உம்மையே சார்ந்து வாழ்கிறோம்
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்
அற்பமான எங்களை கைவிடமாட்டீர்
பழகினோர் பகைக்கையில்
நம்பினோர் எதிர்க்கையில்
அநுகூல துணையானீரே
தாங்கிடும் பெலனானீரே
தேவைகள் ஒரு பக்கம்
நெருக்கங்கள் மறு பக்கம்
எங்கள் பக்கம் நீரே உண்டு
வெட்கப்பட விடுவதில்லையே
சோதனை காலத்தில்
வேதனை நேரத்தில்
வார்த்தையால் ஆற்றி தேற்றினீர்
துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்
Search Keywords: unga samugathuku vanthu vittale, unga samukathuku vanthu vitale lyrics, chords, Jebastin Zerubbabel, engalai kaividamateer, unga samukatuku vanthu vittale lyrics ppt.