வல்லமையுள்ள தேவன் எங்கள் தேவன்
வாக்குமாறா தேவன் எங்கள் தேவன்
வானம் அவர் சிங்காசனம்
பூமி அவர் பாதப்படி
அவர் வாக்குத்தத்தம் செய்த கர்த்தராம்
அவர் வார்த்தையிலே உண்மை உள்ளவராம்
அவர் நித்தியபிதா அவர் நீதியின் தேவன்
அவர் நேற்றும் இன்றும் மாறாதவர்
அவர் அனைவர்க்கும் போதுமானவர்
அவர் அரவணைக்கும் அன்பு தந்தையாம்
அவர் ஜீவனுள்ளவராம் அவர் வானிலுவராம்
அவர் வருகை மிக சமீபம்
அவர் குஷ்டரோகியை ஸ்வஸ்தமாக்கினார்
அவர் சப்பாணியை நடக்க செய்தார்
அவர் பரம வைத்தியாராம் அவர் பாசமுள்ளவராம்
அவர் அன்பு என்றும் மாறாதது