உங்க அன்போட அளவ என்னால
அளந்து பார்க்க முடியல
என்னை உம்மோடு சேர்த்த அதிசயத்தை
நெனச்சி பார்க்க முடியல
நீங்க செய்ததை சொல்ல நாவு போதல
உங்க நன்மையை எண்ண நாளும் போதல
உங்க அன்புக்கு ஈடேயில்ல
உங்க பாசத்துக்கு நிகரேயில்ல
எனக்காகவே நீர் யாவும் செய்கிறீர்
விழும் நேரமோ என்னை தாங்கி கொள்கிறீர்
உமது விருப்பம் நான் செய்ய மறந்தும்
உம்மை கண்டிட எனக்கு உதவி செய்கிறீர்
உங்க அன்புக்கு ஈடேயில்ல
உங்க பாசத்துக்கு நிகரேயில்ல
ஆகாதவன் என்று தள்ளப்பட்டவன்
என் பெயரை சொல்லி என்னை அழைத்தீர்
உமது கரத்தில் என்றும் அலங்காரமாய்
வைத்து என்னையும் உந்தன் பிள்ளையாக்கினீர்
உங்க அன்புக்கு ஈடேயில்ல
உங்க பாசத்துக்கு நிகரேயில்ல
குறைவுள்ளவன் நான் பெலனற்றவன்
உம் சேவையை செய்ய என்னை அழைத்தீர்
நம்பினவர் என்னை கை விட்ட போதிலும்
உங்க அன்பு என்னை விட்டு விலகவில்லையே
உங்க அன்புக்கு ஈடேயில்ல
உங்க பாசத்துக்கு நிகரேயில்ல