கண்ணீரால் பாதத்தை நனைக்கின்றேன்
ஓயாமல் உம்மை முத்தம் செய்வேன்
அதிகமாய் உம்மை நேசிப்பேன்
அதிகமாய் இரக்கம் பெற்றேன்
மீண்டும் மீண்டும் தவறி நான் விழுந்தும்
மீண்டும் என்னை தேடி வந்தீரே
திருக்கரத்தாலே இழுத்துக் கொண்டீரே
திரு ரத்தம் சிந்தி
கழுவி விட்டீரே
என் மீறுதலுக்காய் காயப்பட்டீரே
என் அக்கிரமங்களுக்காய்
நொறுக்கப்பட்டீரே
சமாதானம் கொடுக்கும்
ஆக்கினை ஏற்று
தண்டனை எல்லாம் எடுத்துக் கொண்டீரே
0 Comments