கொஞ்ச நேரம் இயேசுவே என்னோடு பேசும்
ஆசையாய் இருக்கிறேன்
உம்மோடு பேசிட ஆச
உம் குரல் கேட்டிட ஆச
பேசும் பேசும்
இயேசப்பா என்னோடு பேசும்
உம் அருகினில் நான் அமர்ந்து
என் வேதனை சொல்லிட ஆச
உம்மோடு நான் நடந்து
உம்மைப் போல் மாறிட ஆச
ஆச... ஆச... ஆச...
தாவீதை போல நானும்
பாடியே துதித்திட ஆச
உம் இதயதிற்கேற்றவனாய்
உம்மிடம் பெயர் வாங்க ஆச
ஆச... ஆச... ஆச...
தானியேல் போல நானும்
மூவேளை ஜெபித்திட ஆச
தீர்மானம் எடுத்தாலும்
அதில் உறுதியாய் இருந்திட ஆச
ஆச... ஆச... ஆச...
0 Comments