லீலிமலர் போல் மலர்ந்திடுவேன்
லீபனோன் மரம் போல் படர்ந்திடுவேன்
கர்த்தரின் சமூகம் பனித்துளி போல்
காலமெல்லாம் என் இதயத்திலே (ஓசியா 14:5,6)
மலர்ந்திடுவேன், படர்ந்திடுவேன், நறுமணமாய்ப் பரவிடுவேன்
1. மனதார இயேசு சிநேகிக்கின்றார்
மன்னித்தாரே என் மீறுதல்கள்
கோபமோ நீங்கியது
தயவோ வாழ்நாளெல்லாம் (ஓசியா 14:4)
2. கயிறுகளால் கட்டி இழுத்துக்கொண்டார்
கைப்பிடித்து நடக்கப் பழக்குகிறார்
நுகத்தடி அகற்றிவிட்டார்
பக்கம் சாய்ந்து ஊட்டுகிறார் (ஓசியா 11:4)
3. பனித்துளிபோல் என் இதயத்திலே
வார்த்தையினால் தினம் நிரப்புகிறார்
பணிவிடை தொடர்ந்து செய்வேன்
பலியான இயேசுவுக்காய்
0 Comments