யாரும் என்னை காணா நேரம்
என் நெஞ்சின் கோலம் மாரி
தள்ளுண்ட மனதை கண்டாரே
தினந்தோறும் வாடி வாடி
அழகாய் என் மேல் பாடி
முல்லை போல் சில்லில் பூத்தாரே
எந்தன் காட்டில் மனம் வீசும் சாரண் ரோஜாவே
என் முள்ளான வாழ்க்கையில் பூக்கும் லில்லி புஷ்பமே
மறையாமல் தோன்றி என்னில் மலரும் நீதியின் சுடரே
அந்தி மாலை பொழுதில் என்மேல் வீசும் தென்றல் காற்றே
மழை அடித்தால் குடை பிடிப்பீர்
உம் நீதி மாறாதே
பிறர் எடுத்தும் நீர் கொடுப்பீர்
உம் கைகள் குன்றாதே
நான் அழுதால் நீர் துடைப்பீர்
உம் அன்பு மாறாதே
பிறர் எடுத்தும் நீர் கொடுப்பீர்
உம் இதயம் குருகாதே
0 Comments