Thannikulla Irukkira Meen Lyrics - தண்ணிக்குள்ள இருக்கிற | Judah Benhur | Aaron Bala

தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல
உமக்குள்ளே நான் வாழ்கிறேன்
தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல
உம்மகுள்ளே நான் வளர்கிறேன்

மீன் வெளியே வந்தால் அதற்கு ஜீவன் இல்லை
நான் உம்மை பிரிந்தால் எனக்கு வாழ்க்கை இல்லை

நீங்க இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவை
நீங்க இல்லாத வாழ்க்கை முடிவு தெரியாத பாதை
நீங்க இல்லாத வாழ்க்கை அது ஜீவன் இல்லாதது
நீங்க இல்லாத வாழ்க்கை அது ஒன்றுக்கும் உதவாது

நீங்க இல்லாத வாழ்க்கை வெளிச்சம் இல்லாத இரவு
நீங்க இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகு
நீங்க இல்லாத வாழ்க்கை அது வாழ முடியாது
நீங்க இல்லாத வாழ்க்கை எனக்கு வாழ தெரியாது



Post a Comment

0 Comments