நம்ப தகுந்த இயேசுவுக்கு
நன்றி நிறைந்த ஆராதனை
எண்ணிக்கைக்கு உள்ளடங்கா
நன்மை செய்தீரே ஆராதனை (2)
என்னை சுமக்கும் தகப்பன் நீரே
என்னை விசாரிக்கும் தாய் நீரே (2)
என் தகப்பனும் தாயும்
ஓர் உருவான நித்திய மெதுவாளர் நீரே (2)
ஆராதனை ஆராதனை
உமக்குத்தானே ஆராதனை(4)
நம்ப தகுந்தவரே உமக்கு
என்றென்றும் ஆராதனை
மெதுவாளரானவரே உமக்கு
என்றென்றும் ஆராதனை
வருஷம் துவங்கி முடியும் மட்டும்
கண் வைத்து காத்தீரே ஆராதனை
தக்க சமயம் உதவி செய்து
கைதூக்க வந்தீரே ஆராதனை (2)
நான் கடந்த பாதைகள் எல்லாம்
வேறு யாரும் பிழைத்ததில்லை (2)
அதை எல்லாம் கடந்தும்
உயிருடன் உள்ளேன்
நீர் இன்றி சாத்தியமில்லை (2)
என்னை போன்றோர் உயர நினைக்கும்
நல்ல மனசுக்கு ஆராதனை
எல்லாம் தந்து அழகு பார்க்கும்
குழந்தை மனசுக்கு ஆராதனை (2)
தாம் வாழ பிறரை கெடுக்கும்
இந்த பொல்லா உலகின் நடுவில் (2)
ஒரு தன்னலம் இல்லாமல்
எவரையும் உயர்த்தும்
உம் போல நல்லவர் இல்லை (2)
இந்த மனசு யாருக்கும் இல்லை

0 Comments