Vaazha Thodangiten Song Lyrics - வாழ தொடங்கிடேன் | Joel Elijah

இயேசுவுக்கு பிரியமா வாழ தெரியல
உலகத்தை விட்டும் வர முடியல 
கட்டளைகள் பத்தும் தெரிஞ்சிருந்தும் 
அதை பத்தி எனக்கு தான் கவலை இல்லை - 2

சரி திருந்துற மாதிரி ஐடியா இருக்கா இல்லையா?

திரும்பத் திரும்ப பாவம் செய்யிற நான் தான்
திருந்தாம தானே வாழுற நான் தான்
திரும்பத் திரும்ப நான் மன்னிப்பு கேட்டும்

அப்பா அவன் திருந்திட்டான்யா
திரும்பவும் நான் தான் திருந்தவில்லை 

வானத்திலிருந்து வெளிச்சத்தை பார்த்தேன்
பார்வை இழந்தவனாய் விழுந்தேன் 
வானத்திலிருந்து வெளிச்சத்தை பார்த்தேன்
பார்வை இழந்தவளாய் விழுந்தேன்
நான் தேடி போகவில்ல 
என்னை தேடி வந்தீங்க – 2
என்னோடு பேசுற சத்தத்தை கேட்டு
என்னையே கொடுத்துவிட்டேன் - 2

நீ துன்பப்படுத்தும் இயேசு நானே 
முள்ளினில் உதைப்பது கடினமோ
துன்பப்படுத்தும் இயேசு நானே 
முள்ளினில் உதைப்பது கடினமோ

நீ என்ன மறந்தாலும் 
நா உன்னை மறக்கலயே
நீ என்ன வெறுத்தாலும்
நான் உன்னை வெறுக்கலையே

என்னையே கொடுத்துவிட்டேன் - 2

இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிடேன்
உலகத்த விட்டும் வர துணிஞ்சுடேன்
என்னுடைய ஆசைகள் பல இருந்தும்
அவர் சமூகத்தில் எல்லாம் கொடுத்து விட்டேன்




Post a Comment

0 Comments