Um Samugam Munne Pogum Lyrics PPT | உம் சமூகம் முன்னே போகும்

உம் சமூகம் முன்னே போகும்
எதற்கும் பயமில்லையே
உம் ஆவி வெல்லும் கொல்லும்
பார்வோன் தடையில்லையே - 2

இரதங்கள் முறித்து வில்லை ஒடித்தீர்
உம் முன்னே நிற்பவன் யார்
செங்கடல் பிரிந்து சுவர்போல் நின்றதே
உம்மை எதிர்ப்பவன் யார் - 2

எல்ஷடாய் எலோஹீம்... யாவே எலோஹீம்
எல்ஷடாய் எலோஹீம்... யாவே எலோஹீம்

என் கூக்குரல் கேட்டு பெருமூச்சைக் கண்டு
உம் தோளில் எனை ஏற்றினீர்
மேகத்தாலும் அக்னி ஸ்தம்பத்தாலும்
என் தேகம் நீர் மூடினீர்
உழைப்பும் இல்லை உடல் களைப்பும் இல்லை
உம் அப்பம் எனக்கூட்டினீர்
என் வஸ்திரமும் பாத இரட்சைகளும்
மகிமையால் புதிதாக்கினீர் - 2

எந்தனின் பாதம் பட்ட உடனே
யோர்தானும் விலகிடுமே
உம் யோசனையாலே எக்காளம் போதும்
எரிகோவும் விழுந்திடுமே
என் பட்டையத்திற்கு தப்பினதெல்லாம்
கல்மழைக்கிரையானதே
என் வார்த்தையினாலே சூரியனும் சந்திரனும்
ஓரிடம் நின்றிடுமே - 2


எதிரியின் திட்டங்கள் இரகசியங்கள் யாவும்
முன்னமே அறியச் செய்தீர்
எவருமே அறிந்திடா ஆவியின் உலகத்தை
என் கண்கள் காணச்செய்தீர்
அக்கினி மயமான குதிரையும் இரதங்களும்
எனைச்சுற்றி நிற்கின்றதே
அக்கினி மயமான நாவுகளைக் கொண்டு
அற்புதம் செய்பவரே - 2


Search Keywords: um samugam munne pogum, um samoogam mune pokum lyrics ppt, john jebaraj, john jebaraj song lyrics, lyrics in tamil, tamil christian song lyrics ppt, Samson Cephas John, 

Post a Comment

0 Comments