வாசல்களை திறப்பவரே
என் வாழ்விலே திறப்பவரே
நீர் சொன்னால் போதும் நீர் தொட்டால் போதும்
என் வாழ்வில் திறந்திடுமே - இயேசுவே
1. பெரிய சமுத்திரம் வந்தால் என்ன
புரண்டு வருகிற யோர்தான் என்ன
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கான வழியை திறந்திடுவீர்
2. அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன
வருடங்கள் பல ஆனால் என்ன
வார்த்தையினாலும் வல்லமையாலும்
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்
3. வெண்கல கதவுகளானால் என்ன
இருப்பு தாழ்பாள்களானால் என்ன
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு முன்பாக திறந்திடுவீர்
4. வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே
சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு உரைத்ததை நிறைவேற்றுவீர்
Vaasalgalai thirappavare
En vaazhvile thirappavare
Neer sonnaal pothum
Neer thottaal pothum
En vaazhvil thirandhidume – Yesuve
Periya samuthiram vandhaal enna?
Purandu varugira Yordhaan enna?
Vaarthaiyinaalum vallamaiyinaalum
Enakkaana vazhiyai thirandhiduveer
Adaipatta karppamaanaal enna?
Varudangal pala aanaal enna?
Vaarthaiyinaalum vallamaiyinaalum
Arpudham en vaazhvil seidhiduveer
Vengala kathavugal aanaal enna?
Irupu thaazhpaaLgal aanaal enna?
Vaarthaiyinaalum vallamaiyinaalum
Enakku munbaaga thirandhiduveer
Vaakku thandhavar neer maaravillaiye
Sonna vaarthaiyai maatRavillaiye
Vaarthaiyinaalum vallamaiyinaalum
Enakku Uraithathai niraivetrhuveer
