Naan Paartha Alagellam Lyrics PPT | நான் பார்த்த அழகெல்லாம் | Aaron Bala

எங்கள் ஆயுள் முழுக்க அழகானீரே
எங்கள் வாழ்க்கையை அழகாய் மாற்றின தெய்வம் நீரே - 2

நான் பார்த்த அழக்கெல்லாம் உம் முன்பு தோற்றதே
நான் கண்ட பாசமெல்லாம் வேஷமாகி போனதே - 2

பொய்யான அன்பை நம்பி மெய் அன்பு உம்மை மறந்தேன்
மாய்மால வார்த்தை நம்பி உம் வார்த்தை கேட்க மறந்தேன் - 2

புத்தியும் தெளிந்து விட்டதே
உம் பாசம் புரிந்து விட்டதே 

அப்பா உம் சமூகத்துக்கு பயந்து பயந்து நானும் வந்தேன் 
அப்பான்னு கூப்பிடவே தயங்கி தயங்கி நானும் நின்றேன் - 2

எங்கள் ஆயுள் முழுக்க நீர் போதுமே 
எங்கள் வாழ்நாள் முழுவதும் நீர் வேண்டுமே - 2

என்னுடன் பேச துடிக்கும் உம்மிடம் பேச மறுத்தேன் 
என்னிடம் பேச மறுக்கும் மனித அன்பை தேடி அலைந்தேன் - 2

உம் அன்பை புரிந்து கொண்டேன்
உம்மிடம் ஓடி வந்தேன் 

இனிமேல் நான் உம்மை விட்டு ஓட மாட்டேன் 
இயேசப்பா நீர் இல்லாமல் வாழ மாட்டேன் - 2

என் ஆயுள் முழுக்க ஆராதிப்பேன் 
என் வாழ்நாள் எல்லாம் ஆராதிப்பேன் - 2